எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 30 ஏப்ரல், 2022

தமிழ் (13) தமிழிலுள்ள ஓரெழுத்துச் சொற்கள் !

ஓரெழுத்து ஒருமொழி; தமிழில் அறுபதுக்கும் மேல் உள !

 

ஒற்றை எழுத்தே ஒரு சொல்லாக நின்று , அதற்கு ஒன்றோ பலவோ  பொருளாக  அமைவது ஓரெழுத்து ஒருமொழி ஆகும்.உலக மொழிகளில்  தமிழில் மட்டுமே ஓரெழுத்துச் சொற்கள் நிரம்பவும் உள்ளன, என்பது நம் மொழியின் சிறப்பு !

 

**********************************************************

 

- அழகு, சிவன், திருமால், திப்பிலி

-  மாடு, அற்பம், மறுப்பு, துன்பம்

அண்மைச் சுட்டு

-  அம்பு, அழிவு, ஒரு சிற்றுயிர், கொடு

சுட்டெழுத்து, சிவன், உமை, நான்முகன்

- ஊன், இறைச்சி, உணவு, திங்கள், தசை

வினாவெழுத்து, 7 என்பதன் குறி

- ஏவுதல், அம்பு,  இறுமாப்பு, மேல் நோக்கல்

நுண்மை,  அழகு, அரசன், இருமல், குரு, கோழை

ஒழிவு, மதகுப் பலகை,  கொன்றை, உயர்வு, நினைவு

நிலம், விளிப்பு, கடிதல்,

- நெருப்பு ,அரசன், நான்முகன், காற்று, காமன், மனம்

கா - சோலை, காத்தல், காவடி, வருத்தம், வலி, துலை

கு - பூமி, குற்றம், சிறுமை, தடை, நிறம், நீக்கம்

கூ கூவு, நிலம், பூமி

கை - கரம், இடம், உடனே, ஒழுக்கம், சேனை, ஆள், ஆற்றல்

கோ - அரசன், அம்பு, ஆண்மகன், கண், எருது, பசு, பூமி, கோத்தல்

கௌ - 'கௌவு' என்று ஏவுதல், கொள்ளு, தீங்கு

சா - இறத்தல், 'சாவு' என்று ஏவுதல், பேய், சோர்தல்

சீ அடக்கம், அலட்சியம், ஒளி, கலைமகள், பெண், விந்து, துயில்

சூ சுளுந்து, வாண வகை, விரட்டும் ஒலிக்குறிப்பு, நாயை ஏவுதல்

சே - சிவப்பு, இடபராசி, அழிஞ்சில் மரம், எருது, காளை,

சோ - மதில், அரண், உமை, வாணாசுரன் நகர்

ஞா கட்டு, பொருந்து

குபேரன், நான்முகன்

தா கொடு, அழிவு, குற்றம், கேடு, தாண்டு, பகை, வலி,

தீ - நெருப்பு, அறிவு, இனிமை, கொடுமை, சினம், நஞ்சு

து எரித்தல், கெடுத்தல், வருத்தல், வளர்தல், ”உண்என ஏவல்

தூ தூய்மை, தசை, பகை, பற்றுக்கோடு, வெண்மை, வலிமை

தே கடவுள், அருள், கொள்ளுகை, நாயகன், தெய்வம்

தை - தைத்தல், தை மாதம், பூச நாள், மகர இராசி, ஒப்பனை

இன்மைப் பொருள், மிகுதிப் பொருள் உணர்த்தும் எழுத்து

நா - நாக்கு, அயல், அயலார், திறப்பு, பொலிவு, சுவாலை

நீ - முன்னிலை ஒருமைப் பெயர்

நு தோணி, நிந்தை, நேரம், புகழ்

நூ - எள், யானை, அணிகலன், தள்ளு, தூண்டு, அசை,

நே அன்பு, அருள், நேயம்

நை நைதல், கெட்டுப்போதல், வருந்துதல், நசுங்குதல், வாடல்

நொ துன்பம், நோய், வருத்தம், தளர்வு, நொய்ம்மை

நோ வலி, சிதைவு, துக்கம், துன்பம், நோய், வலுவின்மை

நௌ - மரக்கலம், கப்பல்.

காற்று, பெருங்காற்று, சாபம், 1/20 - என்பதன் குறி

பா - பாடல், அழகு, நிழல், பரப்பு, பரவு, தூய்மை, பாம்பு

பி - அழகு.

பீ மலம், தொண்டி அச்சம்.

பூ - மலர், அழகு, இடம், இலை, கூர்மை, பூமி, பொலிவு, மென்மை

பே அச்சம், நுரை, மேகம், இல்லை எனும் பொருள் தரும் சொல்

பை - பசுமை, அழகு, இளமை, நிறம், பாம்பின் படம், பொக்கணம்,

போ - 'செல்' என்று ஏவுதல்.

இயமன், காலம், நிலா, சிவன், நஞ்சு, நேரம்

மா - ஒரு மரம், அழகு, அளவு, அறிவு, ஆணி, மாவு, மிகுதி, வயல்

மீ - ஆகாயம், உயர்ச்சி, மகிமை, மேற்புறம், மேலிடம்

மூ மூன்று, மூப்பு,

மே -  மேன்மை, மேம்பாடு, அன்பு

மை - இருள், எழுது மை, கறுப்பு, குற்றம், நீர், மலடி, மேகம்

மோ மூக்கினால் மோந்து பார்த்தல்

யா - 'யாவை' , ஐயம், அகலம், கட்டுதல், பாடல் யாத்தல்

வா - 'வா' என்று அழைத்தல்.

வி - விசை, அதிகம், ஆகாயம், கண், காற்று, திசை, பறவை, அழகு

வீ - பறவை, நீக்கு, கொல், பூ, விரும்பு, போதல், பூந்தாது

வே – (கூரை) வேய்தல், வேவு பார்த்தல்

வை - 'வை' என்று ஏவுதல், வைக்கோல், கூர்மை, வையகம்

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,

(திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 17]

{30-04-2022}

-------------------------------------------------------------------------------------

திங்கள், 25 ஏப்ரல், 2022

தமிழ் (12) வீரமா முனிவரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் !

தமிழ்ப் பணியாற்றிய தகையாளர் !

[ ஆதாரம்: வித்துவான், ஈ.பண்டாரம் எழுதிய வீரமாமுனிவர் என்னும் நூல் ]

 

தமிழ் எழுத்துகள் அடைந்து வந்த மாற்றங்களை எல்லாம் விளக்கமாக ஆராய்வது அரிதாகும். ஆயினும், சில மாற்றங்களை இங்குக் காண்போம். இப்பொழுது லைஎன்று எழுதப்படுவது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கூட்டு எழுத்தாக எழுதப்பட்டு வந்தது. ஆனால் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கல்வெட்டுகளில் கூட்டு எழுத்துகள் இல்லாமல் இப்போது உள்ளது போலவே லைஎன்று காணப்படுகிறது !

 

தொல்காப்பியர் காலத்தில் என்னும் எழுத்து பகரத்தின் உள்ளே ஒரு புள்ளி இட்டு [ ப் ] எழுதப்பட்டு வந்தது. இதைத் தொல்காப்பியர் உட்பெறு புள்ளி உருவாகும்மேஎன்று கூறியுள்ளமையால் உணரலாம். எனவே தொல்காப்பியர் காலத்தில் ப்என்பதே மகரமாய் [ம] வழங்கி வந்தது என்பது புலனாகிறது. இந்த மகர எழுத்தை எழுதும்போது ஏடு எழுதுவோர், புள்ளியைத் தெளிவாக இடாவிட்டால், அது பகரமாக [ப] தோன்றி மயங்கச் செய்யுமன்றோ ? எனவே பகரத்தில் உட்புள்ளி இட்டு [ப்] மகரத்தை [ம] எழுதி வந்த முறையை மாற்றி என்று உள்ளே சுழித்து எழுதலானார்கள் !

 

இந்த மாற்றம் நச்சினார்க்கினியர் காலத்திற்கு முன்பே  - அஃதாவது 12- ஆம் நூற்றாண்டுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது !

 

வீரமாமுனிவர் காலத்திற்கு முன்பு [1680 -1747 ] ரகர உயிர்மெய்யெழுத்து எனப் பாதம் வைத்து எழுதப்படவில்லை. எனவே பாவைஎன்று எழுதினால் இது பரவையா, பாவையாஎன்று ஐயுறும் நிலைமை இருந்து வந்தது. வீரமாமுனிவர் தான் ரகர  உயிர் மெய் எழுத்தினை எனப் பாதம் வைத்து எழுதும் முறையை அறிமுகப்படுத்தினார் !

 

வீரமாமுனிவர் காலத்திற்கு முன்பு வரை கரம், ”கரம் இரண்டும் நெடில் எழுத்தாகவும் கரம், “கரத்துக்கு மேல் ஒரு புள்ளி வைத்தால் அவை குறில் எழுத்தாகவும் கருதப்பட்டு வந்தன. இந்த முறையை மாற்றி ”, “இரண்டும் குறில் என்றும் ”, “இரண்டும் நெடில் என்றும் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் வீரமாமுனிவர் !

 

அதுபோல், ”கெ”,கொஇரண்டும் நெடில் எழுத்துகளாகவும், அவற்றின் மேல் புள்ளி ஒன்று வைத்தால் அவை குறில் எழுத்தாகவும் வழக்கில் இருந்து வந்தன. இவற்றை மாற்றி கெ”, “கொஇரண்டும் குறில் எழுத்து என்றும், “கே” , “கோஇரண்டும் நெடில் எழுத்து என்று எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் வீரமாமுனிவர் !

 

தமிழ்  எழுத்து வரி வடிவில் சீர்திருத்தம் என்பது அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே இருந்திருக்கிறது. வீரமாமுனிவர் காலத்திற்குப் பின்பு தந்தை பெரியார் காலத்தில் சில எழுத்துச் சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன.  இப்போது வழக்கில் உள்ள ணா”, “ணை, “ணொ”, “ணோ”, றா”, ”றொ, “றோ”, “னா”, “னை”, “னொ”, “னோ”, “லை”, “ளை  ஆகியவை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கூட்டெழுத்து வடிவில் இருந்து வந்தன ! 

 

பெரியார் அறிமுகப்படுத்திய ணா”, “ணை”, “ணொ”, “ணோ”,””றா”, “றொ”, “றோ”, ”னா”, “னை, “னொ”, “னோ”, “லை”, “ளை”, “அய்”, அவ்ஆகிய எழுத்துச் சீர்திருத்தங்களைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டு, அரசு அலுவல்களில் இவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று  முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே  உத்தரவு இட்டிருக்கிறது. இவற்றுள் அய்”, “அவ்தவிர்த்த ஏனைய எழுத்துகளைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தியது என்பதற்காக, முன்பு போல் கூட்டெழுத்து வடிவில் நம்மால் இப்போது எழுதமுடியாது. தட்டச்சுப் பொறி, கணினி ஆகியவை கூட்டெழுத்துக்கு இப்போது இடம் தருவதில்லை !

 

ஐயர்என்பதை அய்யர்என்றும் ஔவையார்என்பதை அவ்வையார்என்றும் தந்தை பெரியார் எழுதினார். நாம் ஐயர்என்றும் எழுதலாம்; “அய்யர்என்றும் எழுதலாம். ஔவையார்என்றும் எழுதலாம்; “அவ்வையார்என்றும் எழுதலாம். இதில் முரண்பாடு கொள்ளத் தேவையில்லை !

 

உரைநடையில் மாத்திரைக் கணக்கு எல்லாம் வராது. செய்யுள் என்று வரும் போது மாத்திரைக் கணக்கு அங்கு முதன்மை இடம் பெறும். ஐயர்என்ற சொல்லை அலகிட்டு  அசை பிரிக்கையில் தேமாஎன்னும் ஈரசைச் சொல்லாக வரும்.அதையே அய்யர்என்று எழுதினாலும் தேமாஎன்னும் ஈரசைச் சொல்லாகவே முடியும்.  ஆகையால், “ஐயர்என்றோ அய்யர்என்றோ எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள். தவறில்லை !

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு 2053, மேழம் (சித்திரை) 12]

{25-04-2022}

-----------------------------------------------------------------------------------------

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

தமிழ் (11) தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் ! குமரி அனந்தன் சூளுரை !


திரு. கருணாநிதி தமிழக முதலமைச்சராக இருந்த போது, கோவில்களில் தமிழில் வழிபாடு (அர்ச்சனை) நடத்த உத்தரவு இட்டிருந்தார். ஏறத் தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தது. அப்போது சமற்கிருத அடிவருடிகள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டனர். அந்தச் சூழ்நிலையில், திரு. குமரி அனந்தன், இராணி வார இதழில், தமிழ் வழிபாட்டை ஆதரித்துக் கட்டுரை எழுதி இருந்தார். அதை அப்படியே, அடி பிறழாமல் உங்களுக்குத் தருகிறேன் !

 

(திரு.நரேந்திர மோடி அவர்கள் தனது கீச்சகப் பக்கத்தில் (TWITTER)  தன் பெயரை சௌக்கிதார். நரேந்திர மோடிஎன்று மாற்றிக் கொண்டார். சௌக்கிதார்என்னும் இந்திச் சொல்லுக்கு காவலாளிஎன்று பொருள். அவரைப் பின்பற்றி அவரது கட்சியினர் தமது பெயருடன் சௌக்கிதார்என்பதை இணைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழுணர்வு மிக்க திரு. குமரி அனந்தனின் மகளான திருமதி. தமிழிசை சௌந்தரராசன்  தனது கீச்சகத்தில் (TWITTER) ”காவலாளி. தமிழிசை சௌந்தரராசன்என்று மாற்றிக் கொண்டிருந்தால், பாராட்டலாம். தன் பெயருக்கு முன்னால் சௌக்கிதார்என்பதை இணைத்துக் கொண்டிருக்கும் அவரை என்னவென்று சொல்வது ! பதவி ஆசை அவரது தமிழையும் அல்லவா குப்புறத் தள்ளிவிட்டது ! இந்த நேரத்தில், ”தமிழிசைக்குஅவரது தந்தையின்  கட்டுரையைப் பரிசாக்கி இங்கு வெளியிடப்படுகிறது)

-------------------------------------------------------------------------------------

தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் !

-------------------------------------------------------------------------------------

 

ஆலயங்களில் தமிழில் வழிபாடு செய்வது கூடாது என்று இந்துக் கோவில்களைப் பாதுகாக்கப் போவதாகக் கூறிக் கொள்ளும் சிலர் கூக்குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர் !

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும், வடபழனி முருகன் கோவிலிலும் அறங்காவலர் குழுக்கள் தீர்மானங்கள் நிறைவேற்றி, அதன்படித் தமிழில் வழிபாடு நடைபெறுகிறது !

 

பேரூர் ஆலயத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்  வழிபாடு நடைபெறுகிறது !

 

மதுரையில் முதல் மாதத்தில் ஏறத்தாழ 250 பேர் மட்டுமே வடமொழியில் அர்ச்சனை வேண்டும் என்று வழக்கத்தின் காரணமாகக் கேட்டு இருக்கலாம். ஆனால் சில வாரங்களில் தமிழில் வழிபாடு வேண்டுவோர் 40,000 ஆகவும், வடமொழியில் வழிபாடு வேண்டுவோர் எவரும் இலர் என்றும் ஆயிற்று. இந்நிலையில் யாரைப் பாதுகாக்க தமிழுக்கு எதிராகக் குரல் எழும்புகிறது !

 

கி.பி.1311 –ஆம் ஆண்டுவரை ஆலயங்களில் தமிழ் தான் வழிபாட்டு மொழியாக இருந்தது. அதன் பிறகுதான் வடமொழி புகுந்தது. பாமர மக்கள் கோவில்களிலிருந்து மெதுவாக ஒதுங்கினர். அவர்களைப் பிற மதங்கள் ஈர்த்தன !

 

கோவில்கள் சிலரின் கைப்பிடிக்குள் அடங்கத் தொடங்கின. அதை அடித்து நொறுக்குவோம் என்ற பெயரிலே தான் கடவுள் மறுப்புக் கொள்கை தமிழகத்தில் வளர்ந்தது.  ஆக இந்து மத விரோதிகள் யார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரியுமே !

 

இன்று இந்து மதத்தைத் தங்கள் இடுப்பிலே மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பவர்களும், தமிழைக் கோவிலுக்குள் நுழைய விடமாட்டோம் என்பவர்களுமே இந்து மதத்தின் பெரும் விரோதிகள் !

 

திராவிடர் கழகத்தை விட, உடன் பிறந்தும், இருந்தும் கொல்லும் இந்த நோய்களே ஆபத்தானவர்கள். இவர்களை எதிர்த்து முறியடித்து, ஆலயங்களில் தமிழை முழங்கச் செய்வது, இறைவன் மீது பக்தி உள்ளவர்கள் செய்யும் கடமை ஆகும் !

 

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்என்று இராமலிங்க அடிகள் பாடினார். மனம் இறைவனோடு ஒருமைப் பட வேண்டுமானால் தாய்மொழியில் வழிபாடு இருந்தால் தானே முடியும். அப்படிப்பட்ட உத்தமர்களது உறவு கோவிலுக்கு வேண்டாம் என்கிறீர்களா ?

 

அப்பரை, சம்பந்தரை, மாணிக்க வாசகரை சுந்தரரை, நாயன்மார்களைவிடப் பெரிய கொம்பன் எவன் ? அவன் எவனாயினும் சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளால், அவன் தாள் வணங்கிஅத்தமிழுக்கு விரோதியை ஆண்டவனுக்கு விரோதியை எதிர்ப்பது நமது கடமை !

 

காந்தி மகான், பாரதியார் போன்றோர் தாய் மொழியிலேயே வழிபாடு இருக்க வேண்டும் என்று போதித்தனர். கடவுள் கொள்கையைப் பரப்புகிற குன்றக்குடி அடிகளாரும், வாரியாரும், கீரனும் தமிழிலே சொற்பொழிவு ஆற்றுகிறார்கள். அதே சொற்பொழிவைக் கேட்கும் தமிழன் தமிழில் வழிபாடு செய்யக் கூடாதா ?

 

தமிழைக் கோவிலுக்கு வெளியே நிறுத்திவிட்டு, தமிழனைக் கோவிலுக்குள் அழைக்கவும் முடியாது. தமிழ் விரோதிகள் கோவிலை ஆக்கிரமித்துக் கொள்ள அனுமதிக்கவும் முடியாது!

 

வாரியார் தமிழ் வெளியேயும், வடமொழி அர்ச்சனை மட்டும் உள்ளேயும் நடக்க வேண்டுமா ?

 

தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்என்றார் பாவேந்தர். தமிழையும் பழித்து அதன் மூலம் கோவில்களையும் அழித்து தம் வயிறு வளர்க்க நினைக்கும்  சுயநலக் கும்பலுக்கு எதிராகப் போர்க்களம் புக, தமிழ்க் குலமே எழுக என அறைகூவி அழைக்கிறேன் !

 

தமிழகத்துக் கோவில்களில் உள்ள அறங்காவலர் குழு அனைத்தும் உடனே கூடி தமிழில் வழிபாடு செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையென்றால், அவர்களுக்கு எதிராகவும் தமிழ் நெஞ்சங்கள் கொதித்து எழும் என்பதை மறக்க வேண்டாம் !

 

தாய் மொழியின் உரிமையைக் காக்கவும், கடவுள் கொள்கையை வளர்க்கவும், தேவைப்பட்டால் கோவில்கள் முன் மறியல் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டேன் !

 

--------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,

[திருவள்ளுராண்டு: 2053, மேழம் (சித்திரை) 09]

{22-04-2022}

--------------------------------------------------------------------------------