தமிழனின் நாகரிகம் பத்தாயிரம் ஆண்டுத்
தொமையானது !
------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் அகழாய்வுசெய்து, கண்டெடுக்கப் பெற்ற பொருள்களில் இரண்டு, அமெரிக்க நாட்டில் புளோரிடா மாநிலத்தில்
உள்ள ஆய்வகத்திற்கு, கரிம ஆய்வின் மூலம் (CARBON -14. TEST) அகவை (AGE) கண்டுபிடிக்கும் நோக்கத்திற்காக அனுப்பி வைக்கப் பெற்றிருந்தன. ஆய்வு
முடிவுகளை மைய அரசின் தொல்லியல் துறையினர், சென்னை
உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் இன்று ஒப்படைத்தனர் !
ஆய்வு முடிவின்படி, ஒரு பொருளின்
அகவை கி.மு.905 என்றும், மற்றொரு பொருளின் அகவை கி.மு.791 என்றும் தெரியவந்துள்ளன. அதாவது முறையே
கி.மு 10 – ஆம் நூற்றாண்டு மற்றும் கி.மு.8 – ஆம் நூற்றாண்டு ஆகும் !
இதுபற்றி நீதியரசர் குறிப்பிடுகையில், இந்தியாவிலேயே மிகப் பழமையான மொழி “தமிழ்” தான் என்பது
உறுதியாகிறது என்று பெருமிதத்துடன் சொல்லியுள்ளார் !
தமிழர்களே ! மிகப் பழமையான மொழிக்குச்
சொந்தக்காரர்களாக இருக்கும் நாம்
இனிமேலாவது நம் தாய்மொழி மீது அக்கறை கொள்வோம் ! தமிழிலேயே பேசுவோம் ! தமிழிலேயே
எழுதுவோம் ! தமிழிலேயே சிந்திப்போம் ! குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களையே
சூட்டுவோம் !!
[ பின் குறிப்பு:- அகழ்ந்தெடுக்கப் பெற்ற ஒரு
பொருள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதைக் கண்டு பிடிக்க அறிவியல் வல்லுநர்கள்
கரிம ஆய்வு முறையைக் கையாளுகின்றனர். அந்தப் பொருளில் இருக்கும் கரிமம்- 14, (CARBON -14) துகளின் அடிப்படையில் அதன் அகவையைக் (AGE) கணிக்கின்றனர். அமெரிக்க நாட்டில் தான்
இதற்கான ஆய்வகம் உள்ளது ]
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
*தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 01]
{15-05-2022}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக