தமிழ் நாட்டுக் கோயில்களில் உள்ள இறைவியர் பெயர்கள் !
----------------------------------------------------------------------------
தமிழ்நாட்டுக் கோயில்களில் எழுந்தருளியுள்ள இறைவியர்
பெயர்கள் பல இனிய தமிழில் அமைந்திருந்தன. காலப்
போக்கில்,
அவற்றுள் பல மறைந்து சமற்கிருதப் பெயர்கள் வழங்கலாயின.
எனினும் இன்னும் சில கோயில்களில் தமிழ்ப் பெயர்கள்
நிலைத்து நிற்கவே செய்கின்றன.உங்கள் பார்வைக்கு அவற்றுள்
சில !
இறைவியின் பெயர் கோயில் உள்ள ஊர்.
------------------------------------------------------------------------------
குழல்வாய் மொழி அம்மை = குற்றாலம் (நெல்லை)
காவியங் கண்ணி
அம்மை =
திருக்குருகாவூர் (சீர்காழி)
பெண்ணின்
நல்லாள் அம்மை = திருக்கழுக்குன்றம்
பாகம்பிரியாள்
அம்மை = திருச்செங்கோடு
ஒப்பிலா
அம்மை =
திருச்சோற்றுத்துறை (தஞ்சை)
அருமருந்தன்ன
அம்மை =
திருந்துதேவன்குடி (குடந்தை)
பசும்பொன்
மயிலம்மை = திருப்பராய்த்துறை (திருச்சி)
இளங்கொடி
அம்மை =
திருப்பறியலூர் (தஞ்சை)
வண்டார்
பூங்குழலி அம்மை = திருப்பாம்புரம் (குடந்தை)
தாமரை
நாயகி =
திருப்பார்த்தன் பள்ளி (சீர்காழி)
கருந்தார் குழலி
அம்மை =
திருப்புகலூர் (நன்னிலம்)
அல்லியங்கோதை
அம்மை =
திருப்புள்ளமங்கை (நாகை)
கரும்பன்ன சொல்
அம்மை =
திருப்புறம்பியம் (குடந்தை)
மின்னனையாள்
அம்மை =
திருப்பூவனம் (மானாமதுரை)
யாழின் மொழி
அம்மை =
திருமணஞ்சேரி (மயிலாடுதுறை)
அல்லியங்கோதை
அம்மை =
திருவாரூர்
யாழைப் பழித்த
மொழி அம்மை = வேதாரணியம்
வண்டார்
பூங்குழல் அம்மை = திருவாளொளிப்புற்றூர் (குடந்தை)
ஏலவார் குழலி
அம்மை =
ஆலங்குடி (குடந்தை)
வேற்கண்ணி
அம்மை =
திருவெண்ணெய் நல்லூர் (விழுப்புரம்)
மின்னலொளி
அம்மை =
திருவெண்பாக்கம் (திருவள்ளூர்)
பொற்கொடி
அம்மை =
திலதைப் பதி (திருவாரூர்)
வேயுறு தோளி
அம்மை =
நீடூர் (மயிலாடுதுறை)
ஏலவார் குழலி
அம்மை =
திருவிற்குடி (திருவாரூர்)
இளங்கிளி
அம்மை =
அச்சிறுபாக்கம்
(அடைப்புக் குறிக்குள் அருகில் உள்ள பெரிய ஊர்ப்
பெயர் தரப்பட்டுள்ளது)
------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் ! தமிழ்
! தமிழ் !” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:2053, மீனம்
(பங்குனி) 23]
{06-04-2022}
-----------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக