எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 2 மே, 2022

தமிழ் (14) தமிழில் சொல் வளம் (அடை, நடை, படை....) !

வினையடியாகப் பிறக்கும் ஈரெழுத்துத் தொழிற் பெயர்கள் !

 -------------------------------------------------------------------------------------

தமிழில் சொல் வளத்திற்குக் குறைவே இல்லை; நிரம்பவே உள்ளன ! ஆழ்ந்து படிக்காததாலும், நுணுகி ஆராயத் தவறுவதாலுமே, கருத்துகளைத் தெளிவாகத் தெரிவிக்கப் போதுமான சொற்கள் தமிழில் இல்லை எனச் சிலர் குறை சொல்கின்றனர். குறை அவர்களிடம் தான் உள்ளது; தமிழில் இல்லை !  சொல் வளத்திற்கு எடுத்துக் காட்டாகச் சில சொற்களும், அப்பெயர் வரக் காரணம் என்ன என்பதும் பின்வரும் பத்தியில் விளக்கப்பட்டுள்ளது !

 

-------------------------------------------------------------------------------------

 

(ஒவ்வொரு வரி இறுதியிலும் அதன் பெயர்என்பதை (இல்லாத இடத்தில் மட்டும்)  சேர்த்துக் கொள்க!)

 

--------------------------------------------------------------------------------------

அடுதல் செய்து தயாரிப்பதால்.....................= அடை (WAFER)

(ஆடுமாடுகளை) கிடத்தி வைப்பதால்.........= கிடை (HERD)

இடுகி (ஒடுங்கி) இருப்பதால்.........................= இடை (WAIST)

 (உடலைத்) தொட்டுக்கொண்டு இருப்பது..= தொடை (THIGH)

உடுக்கப் படுவதால் அதன் பெயர்...................= உடை (DRESS)

 (உட்பக்கம்) குடைவாக இருப்பதால்..........= குடை (UMBRELLA)

எடுத்தல் அளவையால் காண்பது...............= எடை (WEIGHT)

கூடு போல் பின்னப் படுவதால்....................= கூடை (BASKET)

கோடுதல் (வெப்ப எரிவு) செய்வதால்.......= கோடை (SUMMER)

சடைத்துப் (கிளைத்து) பின்னுவதால்.............= சடை (BLAIT)

சூடிக் கொள்வதால் அதன் பெயர்..................= சூடை (HEAD-WEAR)

 (தறி) நெட்டிழைக்கு ஊடே ஓடுவது............= ஊடை (WOOF)

(தறியை) ஆட்டியாட்டி நெய்வதால்............= ஆடை (CLOTH)

நடத்தலால் விளைவது.................................... = நடை (WALK)

 (நிறுத்துக்) கட்டி விற்குமிடம்.........................= கடை (SHOP)

 (நீர்) ஓடுதலால் உருவாவது............................= ஓடை (STREAM)

படுக்கப் (அழிக்க) பயன்படுவதால்................= படை (ARMY)

பீடித்தல் (துன்பம் தரல்) செய்வதால்.........= பீடை (MISERY)

பெட்கப் படும் (விரும்பப்படும்) பறவை...= பேடை (FEMALE BIRD)

மடுத்தல் (தோண்டி)  செய்வதால்...............= மடை (CHANNEL)

மூடி (கட்டி) வைப்பதால்..................................= மூடை (BAG)

மேடாக (உயரமாக)  இருப்பதால்................= மேடை (STAGE)

வடக்கிலிருந்து வீசுவதால்..............................= வாடை (NORTH WIND)

வட்டித்துச் (வட்டமாக்கி) செய்வதால்.............= வடை (VADAI)

விடுக்கப்படுவதால் (அதன் பெயர்)...........= விடை (ANSWER)

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 19]

{02-05-2022}

-------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக